தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளும் , மாறிவரும் மக்கள் மனநிலைகளும் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது .
காங்கிரஸ் கட்சியின் களவாணி வேலைகளும் , கழகங்களின் திருட்டுத்தனங்களும்
மக்களை மிகவும் சோர்வு கொள்ளவைத்துள்ளது , எதன் மீதும் நம்பிக்கை வைக்கமுடியாமல் சுயநலமாக வாழவேண்டிய கட்டாயத்திற்கு
தள்ளப்பட்டுள்ளார்கள் ... இது மிகவும் அபாயகரமான நிலை ....
மனித நேயம் குறைந்து, வெறுப்பு நிலை அதிகரித்து , கவலையில்லாமல் , குறிக்கோள் இல்லாமல் , எதிர்கால சிந்தனை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம் ...
நம்மை வழிப்படுத்த , நெறிப்படுத்த சக்தி மிகுந்த தலைவர் வெகு நிச்சயமாக விரைவாக வேண்டும் ..
நம்தமிழத்தில் இன்னும் திறமையான , நல்லெண்ணம் கொண்டவர்கள் நிறைய இருந்தாலும் மக்கள் பின்புலம் உள்ளவர்கள் வெகு சிலரே ..
அவர்களில் முதன்மையானவர் ரஜினிதான் .....
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் , உலக அளவில் மக்களின் ஆதரவினை பெற்றுள்ள ஒருமனிதர் நீங்கள் ....
உங்களின் பலத்தை முழுமையாக உணருங்கள் .. உங்களை சுற்றியுள்ள மாய வலைகளை அறுத்தெறியுங்கள் .....
உங்களின் வாழ்க்கையை உங்கள் விருப்பம் போல் வாழலாம் ...
இது எண்களின் வேண்டுகோள் .. விருப்பம் ....
எளிமை மட்டுமின்றி உண்மை, நேர்மை , வீரத்தையும் அடையாளமாக்கிக்கொள்ளுங்கள் ...
மக்களுக்கு சேவை செய்ய ஆண்டவன் கட்டளையை எதிர்பார்த்திருப்பது மடமை ...
மக்களின் உணர்வுகளை உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளதீர்கள் ...
தயங்காமல் தலைமை ஏற்க வேண்டும்...
நல்லக்கண்ணு போன்ற தன்னலம் இல்ல தலைவர்களை துணை கொண்டு , தோழர்கள் , நெடுமாறன் , வைகோ , கலைத்துறை நண்பர்கள் உடன்வர புதியக்கூட்டணி அமைக்கவேண்டும் ...
இல்லை இதெல்லாம் வேணாம் என்வழி தனிவழி என்று சொல்லிட்டு உங்கள் பாதையில் செல்லலாம் .. ஆனால் மக்களை உசுப்பேற்றும் வாசனைகளை பேசாமல்
கருப்பு பணம் , பொருளாதார ஏற்றத்தாழ்வு வசனம் பேசி நடித்து விட்டு ... கோடிக்கணக்கில் கருப்பு பணம் சம்பளமாக வாங்கிக்கொண்டும் ,
கலைஞர் ஜி , கலாநிதி ஜி வலது பக்கம் அல்லது இடது பக்கம் உட்கார்ந்து கைதட்டிவிட்டும் , இமயமலை போறவழியில் ரோடு ஓரம் டீக்கடையில் டீ அடிச்சிட்டு படுக்கறதுமான உங்க வழியில் போலாம்
சிங்கமாகவும் அசிங்கமாகவும் வாழலாம் .. உங்கவிருப்பம்தான்
Thursday, December 23, 2010
Tuesday, September 21, 2010
மெய் - உண்மை , உடல்
மனம் ஒரு மந்திரவார்த்தை ... உயர்வு , தாழ்வு, மகிழ்ச்சி ,துன்பம் , சாதனை ,வேதனை , உறவுகள் , நட்பு அனைத்திற்கும் மனமே காரணம் ...
மனம் நம் கண்களுக்கு தெரியாமல் நமது ஒவொரு செயலையும் வடிவமைக்கிறது , வழிநடத்துகிறது
மனம் உணர மட்டுமே முடியும் ... மனம் உடல் இரண்டும் , உடலும் உள்ளமும் ஒன்றை ஒன்று ஆதாரமாகக் கொண்டு இயங்குகிறது
மனதை காண்பது இயலாத காரியம் ... தற்போதுள்ள அனைத்து பயிற்சிகளும் மனதை ஒருமுகம் செய்வதை மூலமாகக் கொடுள்ளன
பார்க்க முடியாத ஒரு பொருளை நம் வசம் கொண்டு வருவது சிறிது கடினம்
நம்மால் பார்க்கவும் உணரவும் முடிந்த ஒரு பொருளை எளிதில் வசப்படுத்த இயலும் ..
நமது பயிற்சிகள் உடலை பிரதானமாகக்கொண்டவை ..
sound mind sound body like wise sound body sound mind ...
உடல் வழி உயிர்வழி காணப்போகிறோம்
உடல் மிகவும் இன்றியமையாதது .. எனவே நம் முன்னோர்கள் உடலை மெய் என்று அழைத்தனர் ...
திருமூலரும் உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று கூறியிருப்பதும் உடலின் முக்கியத்துவம் கருதியே
நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் உணர்சிகளுக்கும் , உணர்வுகளுக்கும் காரணமாகின்றன ,
உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக பராமரிப்பதன் மூலமும் , சக்திகளை சரி செய்வதன் மூலமும் நிலையான இன்பமும் , பயனுள்ள வாழ்வும் பெறமுடியும்
மெய்வழி மெய்ஞானம் பற்றி இனி விரிவாக காணலாம்

Subscribe to:
Posts (Atom)