Tuesday, September 21, 2010

   மெய்       -   உண்மை   ,  உடல்


                     மனம்   ஒரு  மந்திரவார்த்தை  ...      உயர்வு , தாழ்வு, மகிழ்ச்சி ,துன்பம் , சாதனை ,வேதனை , உறவுகள் , நட்பு   அனைத்திற்கும்  மனமே காரணம்  ...

மனம்  நம் கண்களுக்கு  தெரியாமல் நமது ஒவொரு செயலையும்  வடிவமைக்கிறது  , வழிநடத்துகிறது
மனம்  உணர மட்டுமே  முடியும் ... மனம்  உடல்  இரண்டும்    ,  உடலும் உள்ளமும்  ஒன்றை ஒன்று   ஆதாரமாகக் கொண்டு  இயங்குகிறது
மனதை காண்பது இயலாத காரியம்  ... தற்போதுள்ள  அனைத்து  பயிற்சிகளும்     மனதை  ஒருமுகம்  செய்வதை    மூலமாகக் கொடுள்ளன

பார்க்க முடியாத  ஒரு பொருளை  நம் வசம் கொண்டு வருவது  சிறிது  கடினம்
நம்மால்  பார்க்கவும்  உணரவும்  முடிந்த ஒரு பொருளை  எளிதில்  வசப்படுத்த  இயலும் ..

நமது  பயிற்சிகள்  உடலை பிரதானமாகக்கொண்டவை  ..
 sound mind sound body    like wise  sound  body  sound mind ...

உடல் வழி  உயிர்வழி  காணப்போகிறோம்

உடல் மிகவும்  இன்றியமையாதது ..  எனவே  நம் முன்னோர்கள்   உடலை  மெய்  என்று அழைத்தனர்  ...   

திருமூலரும்   உடல் வளர்த்தேன்   உயிர் வளர்த்தேனே   என்று கூறியிருப்பதும்    உடலின்     முக்கியத்துவம்   கருதியே

நம்  உடலின் ஒவ்வொரு  உறுப்புகளும்   உணர்சிகளுக்கும் , உணர்வுகளுக்கும்   காரணமாகின்றன  ,
உடல் உறுப்புகளை  ஆரோக்கியமாக  பராமரிப்பதன் மூலமும் , சக்திகளை சரி செய்வதன் மூலமும்  நிலையான இன்பமும்  , பயனுள்ள  வாழ்வும்   பெறமுடியும்

மெய்வழி    மெய்ஞானம்   பற்றி இனி விரிவாக காணலாம்