திரு. ஆத்ம தத்துவ தாஸ் அவர்களிடம் உரையாடிய ஒரு மணி நேரம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது ..பயணங்கள் மிகவும் அருமையான விசயம் .எண்ணற்ற அனுபவங்களையும் அறிவு வளர்ச்சியையும் தருகிறது ..பயணம் பற்றிய ஆவல் மீண்டு அதிகரித்தது ..பயணம் என்பது வெளிநாடுகளின் பயணம் என்றில்லை ..சாமானியர் மற்றும் நடுத்தர மக்களின் பயணங்களும் அதே அளவு அனுவத்தைக்கொடுக்கும்
திரு . இராமக்ருஷ்ணனின் பயணம் பற்றிய கட்டுரைகளை படிக்கும்பொழுது உண்டான அனுபவம் திரு .ஆத்ம தத்துவ தாஸ்.அவர்களுடன் உரையாடும்பொழுது கிடைத்தது ...அனால் இப்பொழுது நமக்குதான் எதற்கும் நேரம் இல்லை ..
உண்ண உறங்க , ரசிக்க எதற்கும் நேரம் இல்லை ஓடிக்கொண்டே இருக்கிறோம் ..
பயணம் செய்பவன் மிகப்பெரிய ரசிகன் .எந்த வொரு வசதிகளும் இல்லாத காலத்தில் படிக்கவும் ,அறிந்துகொள்ளவும் பயணம் மேற்கொண்ட யுவான் சுவாங் , பாஹியான் மிகுந்த வியப்புக்குரியவர்கள் , அவர்கள் ரசிகர்கள் மட்டுமின்றி சமுதாய சிந்தனையும் உடையவர்கள் ..மேலும் வாழ்க்கை மீதும் எதிர்காலத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் ........
No comments:
Post a Comment