தமிழ் ஈழம் காத்த... தமிழக மீனவர்களை கடிதம் மட்டுமே எழுதி காப்பாற்றிய பெருமை என்ன ..? காவிரி பிரச்சனைக்கு கடிதம் எழுதி தீர்வு கண்டது என்ன ...
கச்சத்தீவினை மீட்ட வீரம் என்ன ? விருப்ப வீட்டு மனை ஒதுக்கேடு மூலம் நலிந்தோர்க்கு உதவிய நல்லெண்ணம் என்ன ? நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க மானாட மயிலாட ரசிக்கும் பாங்கும் , சலூன் கடை திறக்கவும் , தமிழ் சினிமாவினை உலகத்தரத்திற்கு உயர்த்தும் படங்களுக்கு
வசனம் எழுதும் மனப்பாங்கு என்ன ? ரெய்டு நடந்தது அவமானம் இல்லையா என்றால் உங்க வீட்டில் நடந்ததா என்று பதில் தந்த சாமர்த்தியம் என்ன ?
ஊழல் வழக்கில் கைதானவருக்கு மாவீரன் பட்டம் வழங்கிய பெருமை என்ன ..? நடிகை தமன்னாவிற்கும் அனுஷ்காவிற்கும் கலைமாமணி வழங்கி பெருமிதம் கொண்டது என்ன ?
No comments:
Post a Comment